×

கன்னியாகுமரி அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: கன்னியாகுமரி அகஸ்தீஸ்வரம் அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். சிறுமிகளின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டம் நீண்டகரை “ஆ” கிராமம், பிள்ளைத்தோப்பு கடற்கரைப் பகுதியில் கடந்த 25.02.2024 அன்று பிற்பகல் ஆலன்கோட்டை அரசுப்பள்ளியில் படித்துவரும் மாணவிகள் சஜிதா (வயது 13) த/பெ.முத்துக்குமார் மற்றும் தர்ஷினி (வயது 13) த/பெ.இரத்தினகுமார் ஆகிய இருவரும் கடற்கரையில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கடல் அலை இழுத்துச் சென்றதில் கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தார்கள் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களின் பெற்றோர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post கன்னியாகுமரி அருகே கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Kanyakumari ,K. Stalin ,Chennai ,Augustiswaram ,
× RELATED மருத்துவ உலகிற்கு பேரிழப்பு!:...