×

பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த 30 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில்

திருவண்ணாமலை, பிப்.28: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர் காப்புக் காட்டில் விட்டனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், நூற்றுக்கும் மேற்பட்ட குரங்குகள் நடமாட்டம் உள்ளன. அதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூஜைக்கு கொண்டுசெல்லும் தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்களை அபகரித்து, குரங்குகள் தொல்லை கொடுக்கின்றன. அதனால், பக்தர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, கோயில் பிரகாரங்களில் நடமாடும் குரங்குகளை பிடித்து அப்புறப்படுத்த, கோயில் நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, கோயில் 4ம் பிரகாரத்தில் அம்மணி அம்மன் கோபுரம் அருகே வனத்துறை சார்பில் கூண்டுகள் வைக்கப்பட்டு, அதன்மூலம் கடந்த இரண்டு நாட்களில் சுமார் 30க்கும் மேற்பட்ட குரங்குகள் பிடிபட்டன. அதைத்தொடர்ந்து, பிடிபட்ட குரங்குகளை சொரகொளத்தூர் காப்புக்காடு பகுதியில் பாதுகாப்பாக கொண்டுசென்று வனத்துறையினர் விட்டனர். குரங்குகளை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post பக்தர்களுக்கு தொல்லை கொடுத்த 30 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு காப்புக்காடு பகுதியில் விடப்பட்டது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai Annamalaiyar Temple ,Thiruvannamalai ,Annamalaiyar temple ,Tiruvannamalai ,Tiruvannamalai Annamalaiyar temple ,
× RELATED திருவண்ணாமலையில் பங்குனி மாத...