×

திமுக நிர்வாகி இல்ல விழா

 

பரமக்குடி, பிப். 28: பரமக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட போகலூர் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான கே.கே.கதிரவன் இல்ல காதணி விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட செயலாளர், ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு குழந்தைகளை வாழ்த்தினார். முன்னதாக கிழக்கு ஒன்றிய செயலாளர் கதிரவன் வரவேற்றார்.

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை வீரன், மாநில தீர்மானக் குழு துணைத் தலைவர் திவாகரன், முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன். பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி, ராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், போகலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சத்யா குணசேகரன், ஒன்றிய செயலாளர்கள் பரமக்குடி ஜெயக்குமார், கிருஷ்ணமூர்த்தி நயினார் கோவில் சக்தி,

போகலூர் ஊராட்சி ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சின்னாள், அரசு வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், போகலூர் துணைச்செயலாளர்கள் கனகராஜ், ரவி, கலைச்செல்வி, அவைத்தலைவர் அப்பாஸ் கனி, மாவட்ட பிரதிநிதிகள் கார்த்திக் பாண்டியன், ராமகிருஷ்ணன் தனிக்கொடி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சரவணன், சிவசுப்பிரமணியன், ராமகிருஷ்ணன், குருசாமி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

The post திமுக நிர்வாகி இல்ல விழா appeared first on Dinakaran.

Tags : DMK ,Paramakudi ,KK Kathiravan ,Pokalur ,DMK East Union ,Paramakkudy Assembly Constituency ,Kathani ,Ramanathapuram ,Kathar Patsa Muthuramalingam ,Dinakaran ,
× RELATED இந்தியா கூட்டணி வேட்பாளர் உறவினர் கார் உடைப்பு