×

விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி

 

மேட்டுப்பாளையம், பிப்.28: மேட்டுப்பாளையம் மணி நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (70). கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி (62). கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து வன பத்ரகாளியம்மன் கோயிலுக்கு செல்ல அரசுப்பேருந்தில் ஏறி உள்ளார். அப்போது, பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் அவர் ஏறுவதற்குள் பேருந்தினை இயக்கியுள்ளனர். இதனால் கீழே விழுந்த வரலட்சுமிக்கு இடது கை மற்றும் கால் ஆகியவற்றில் அடிபட்டு வீட்டிலேயே அவர் முடங்கிக்கிடக்கும் நிலை ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு மேட்டுப்பாளையம் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிவுற்ற நிலையில் நீதிபதி கெங்கராஜ் கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வரலட்சுமிக்கு ரூ.9,33,471 இழப்பீடு தர வேண்டும் என தீர்ப்பளித்தார் இந்த இழப்பீட்டில் ரூ.1.11 லட்சம் பாக்கி தராமல் போக்குவரத்துக்கழகம் காலதாமதம் செய்து வந்தது. இந்நிலையில் வரலட்சுமி மேல்முறையீடு செய்துள்ளார். இதனையடுத்து நீதிமன்ற அலுவலர் ரமேஷ் கண்ணன் நேற்று மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் நிறுத்தி இருந்த அரசுப்பேருந்து நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்தார்.

The post விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் அரசு பேருந்து ஜப்தி appeared first on Dinakaran.

Tags : Govt ,Mettupalayam ,Selvaraj ,Mettupalayam Mani Nagar ,Coolie ,Varalakshmi ,Vana Bhadrakaliamman temple ,
× RELATED கோடை சீசனை ஒட்டி உதகை –...