×

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் ஆந்திரா எம்எல்ஏக்கள் 8 பேர் தகுதி நீக்கம்: சபாநாயகர் உத்தரவு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 8 எம்எல்ஏக்களைதகுதி நீக்கம் செய்ய ஒய்.எஸ்ஆர் தலைமைக் கொறடா முதுனூரு பிரசாதராஜு சபாநாயகரிடம் புகார் அளித்தார். அதேபோல் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் கரணம் பலராம், வல்லபனேனி வம்சி, கிரிதர் மற்றும் வாசுபள்ளி கணேஷ் ஆகியோர் கட்சியில் இருந்து விலகியதால் அந்த எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் தெலுங்கு தேசம் கட்சி கொறடா தோள பால வீராஞ்சநேயசாமி புகார் அளித்தார்.

இரு தரப்பினரின் புகார்களை விசாரித்த சட்டசபை சபாநாயகர் தம்மினேனி சீதாராம், எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் பெற்றார். இருதரப்பு விளக்கம் கேட்டு 8 எம்எல்ஏக்களையும் கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். சபாநாயகரின் உத்தரவின்படி ஆந்திர சட்டப்பேரவை செயலாளர் ராமச்சார்யா இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

The post ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்- தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் ஆந்திரா எம்எல்ஏக்கள் 8 பேர் தகுதி நீக்கம்: சபாநாயகர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Andhra MLAs ,YSR Congress ,Telugu Desam Party ,Tirumala ,YSR ,Andhra Pradesh ,whip ,Muthunuru Prasadharaju ,8 Congress MLAs ,Legislative Assembly ,
× RELATED தேர்தல் பத்திரம் பதிவை நீக்க உத்தரவிட்டது ஏன்?.. காங்கிரஸ் கேள்வி