×

கண் வறட்சியைப் போக்க சில எளிய வழிகள்!

நன்றி குங்குமம் டாக்டர்

இன்றைய காலத்தில் மொபைல் போன் பார்ப்பதும் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. இப்படி தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்யும் போது கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, சிவந்து போதல், எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுவது பலருக்கும் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் சிலர் கண்களுக்கு மருத்துகளை விட்டுக் கொள்கின்றனர். இவ்வாறு மருந்துகளை விட்டுக் கொள்வதால், கண்களில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவை அப்போதைக்கு சரியாவது போன்று இருந்தாலும், கண்களின் வறட்சி முழுமையாக நீங்குவதில்லை.எனவே இந்த பிரச்னைக்கு ஒருசில இயற்கை முறைகளை பின்பற்றினால் தீர்வு காணலாம். அவற்றை பார்ப்போம்:

கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்து விடுவதோடு, அதில் இருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். கண்களில் ஏற்படும் இந்த வறட்சி மற்றும் எரிச்சலை தடுக்க சிறந்த வழியென்றால் அது குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது தான். எனவே அவ்வப்போது கண்களை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

நீண்ட நேரம் மொபைல் போன் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் முன்பு உட்கார்ந்திருந்தால், அவ்வப்போது கண்களுக்கு சிறிது இடைவேளை கொடுக்க வேண்டும். அந்த இடைவேளையின் போது கண்களை அங்கும் இங்கும் சுழற்றுவது, சிறிது நேரம் கண்களை சிமிட்டுவது, மூடிக் கொள்வது போன்ற கண்களுக்கான சிறுசிறு பயிற்சிகளை செய்யலாம். இதன் மூலம் கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.

கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்ளை ரிலாக்ஸ் செய்வதற்கு சிறிது கண்களுக்கு குளிர்ச்சியானது தேவைப்படுகிறது. எனவே கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும் வகையில் வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால் கண்கள் வறட்சி நீங்கி, புத்துணர்ச்சியடையும்.

கண்களின் வறட்சி மற்றும் அரிப்பை சரி செய்ய ரோஸ் வாட்டரும் ஒரு சிறந்த பொருள். அதற்கு ரோஸ் வாட்டரை சிறிது கண்களில் விட வேண்டும். இதனால் கண்களில் உள்ள அழுக்குகள் வெளியேறுவதோடு, கண்கள் எப்போதும் வறட்சியின்றி இருக்கும்.

தொகுப்பு: தவநிதி

The post கண் வறட்சியைப் போக்க சில எளிய வழிகள்! appeared first on Dinakaran.

Tags : Dr.Kumkum ,Dinakaran ,
× RELATED மானுடம் போற்றும் மகத்தான சேவை… புற்றுநோயாளிகள் பராமரிப்பு!