×

பள்ளிச் சீருடை கொள்முதலுக்கான பாஜ ஜவுளி அமைச்சரின் பரிந்துரை புறக்கணிப்பு: அரசின் செயலால் கடும் அதிருப்தி

மும்பை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை கொள்முதலுக்கான பாஜ கட்சியைச் சேர்ந்த ஜவுளித்துறை அமைச்சரின் பரிந்துரையை மாநில அரசு புறக்கணித்து உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான சீருடைகள் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகின்றன. நடப்புக் கல்வியாண்டு நிறைவடைய உள்ள நிலையில், அரசு சார்பில் இதுவரையிலும் சீருடை கொள்முதலுக்கான டெண்டர் வழங்கப்படவில்லை. இந்த டெண்டர், ஆண்டுதோறும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்திலேயே ஒப்படைக்கப்படும்.

ஆனால் வரும் கல்வியாண்டில் பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடை வழங்குவதற்கான டெண்டர் விடும் பணியை அரசு தற்போது வரை மேற்கொள்ளவில்லை. எனவே மாணவர்களுக்கு சீருடை வழங்குவதில் தாமதம் ஏற்படும் எனத் தெரிகிறது. இது தொடர்பாக மாநில ஜவுளித்துறை சார்பில் பள்ளிச் சீருடைகளை குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து ரூ.138 கோடி செலவில் வாங்குவதற்கு அத்துறையின் அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் மாநில அரசுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பினார். அதில் குறிப்பிட்டதாவது:

ஒரே மாநிலம் ஒரே சீருடை திட்டத்தின் கீழும், அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இலவச சீருடை திட்டத்திற்காகவும் சீருடைகளை கொள்முதல் செய்ய மாநில ஜவுளித்துறைக்கு அனுமதி அளிக்க வேண்டும், எனக் குறிப்பிட்டிருந்தார்.இந்த டெண்டரை குஜராத் மற்றும் ராஜஸ்தானைச் சேர்ந்த தனக்கு நெருக்கமானவர்களுக்கு ஜவுளித்துறை அமைச்சர் சந்திரகாந்த் பாட்டீல் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக சமாஜ்வாடி எம்எல்ஏ ராய்ஸ் சேக் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து, பாஜ அமைச்சரின் இந்த பரிந்துரையை புறக்கணித்த ஷிண்டே கட்சியைச் சேர்ந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மகாராஷ்டிரா பிரதமிக் சிக்‌ஷான் பரிஷத் அமைப்புக்கு பள்ளிச் சீருடையை கொள்முதல் செய்வதற்கான டெண்டரை வழங்கினார். எனவே ஜவுளித்துறை அமைச்சர் தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது.

The post பள்ளிச் சீருடை கொள்முதலுக்கான பாஜ ஜவுளி அமைச்சரின் பரிந்துரை புறக்கணிப்பு: அரசின் செயலால் கடும் அதிருப்தி appeared first on Dinakaran.

Tags : BJP ,MUMBAI ,Dinakaran ,
× RELATED கனமழை எதிரொலி: மும்பை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு