×

3 வங்கிகளுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ

மும்பை: ஒழுங்குமுறை விதிகளை மீறியதற்காக பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி மற்றும் சிட்டி யூனியன் வங்கி ஆகியவற்றுக்கு சுமார் ₹3 கோடி அபராதம் விதித்துள்ளதாக ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி நேற்று விடுத்த அறிக்கையில், ‘டெபாசிட்டர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதி திட்டம் தொடர்பான சில விதிமுறைகளை மீறியதற்காக எஸ்பிஐ வங்கிக்கு ₹2 கோடியும், வராக்கடன் கணக்குகளில் உள்ள வேறுபாடு மற்றும் போதுமான அளவு நிதி ஸ்திரத்தன்மை, பணப்புழக்கம் மற்றும் இடர்மேலாண்மை நடைமுறைகளுக்கான விதிமுறைகளுக்கு இணங்காததற்காக சிட்டி யூனியன் வங்கிக்கு ₹66 லட்சமும், சில வழிகாட்டுதல்களை பின்பற்றாத கனரா வங்கிக்கு ₹32.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது’ என கூறப்பட்டுள்ளது.

The post 3 வங்கிகளுக்கு ரூ.3 கோடி அபராதம் விதித்தது ஆர்பிஐ appeared first on Dinakaran.

Tags : RBI ,Mumbai ,Reserve Bank ,State Bank of India ,Canara Bank ,City Union Bank ,Dinakaran ,
× RELATED ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு