×

பா.ஜ தேர்தல் அறிக்கைக்கு 1 கோடி பேரிடம் ஆலோசனை: வீடியோ வேன்களை துவக்கி வைத்தார் நட்டா

புதுடெல்லி; பா.ஜ தேர்தல் அறிக்கை தயாரிக்க 1 கோடி பேரிடம் ஆலோசனை கேட்க வீடியோ வேன்களை ஜேபி நட்டா நேற்று தொடங்கி வைத்தார். நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பொதுமக்களின் ஆலோசனைகளை கேட்டுப்பெறும் பணிகளை அந்த கட்சி தொடங்கி உள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள 543 ெதாகுதிகளுக்கும் சென்று 1 கோடி மக்களின் ஆலோசனை கேட்டு பெறுவதற்கு வீடியோ வேன்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. அந்த வேன்களை நேற்று பா.ஜ தேசியத்தலைவர் ஜேபி நட்டா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதுபற்றி அவர் கூறும்போது,’ இந்த வீடியோ வேன்கள் மூலம் பொதுமக்களின் ஆலோசனைகள் பெறுவது மட்டுமல்லாமல், நாட்டின் முன்னேற்றத்திற்காக பிரதமர் மோடி ஆற்றிய பணிகள் மற்றும் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து மக்களுக்கு தெரிவிக்க பாஜ முடிவு செய்துள்ளது. இந்த வேன்கள் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியிலும் பயணிக்கும். ஒரு கோடி ஆலோசனைகள் பெறப்படும்’ என்றார்.

The post பா.ஜ தேர்தல் அறிக்கைக்கு 1 கோடி பேரிடம் ஆலோசனை: வீடியோ வேன்களை துவக்கி வைத்தார் நட்டா appeared first on Dinakaran.

Tags : BJP ,Natta ,New Delhi ,JP Natta ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...