×

பிரதமர் திருப்பூர் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து செல்ல ஒரு பூத்துக்குகு ரூ.5 ஆயிரம் வசூல்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை 27.02.2024 செவ்வாய்க்கிழமை
வருகை தர இருக்கிறார். மாதப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து செல்ல ஒரு பூத்துக்கு ரூ.5 ஆயிரம் வசூல் செய்யப்பட்டு வருகிறது.

பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாதப்பூரில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இதற்காக ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி, பொள்ளாச்சி ஆகிய பாராளுமன்ற தொகுதியில் இருந்து கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை அழைத்து செல்லவேண்டும். 5 லட்சம் அளவில் கூட்டத்தை கூட்ட வேண்டும் என திட்டமிட்டு வேலை செய்து வருகின்றனர்.

ஆனால் இப்பகுதியில் பாஜ வில் கட்சி உறுப்பினர்கள் அந்த அளவில் இல்லை என கூறப்படுகிறது. பல பூத்களில் நிர்வாகிகளை போட முடியாமல் தவிக்கின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்த போது சில அனுதாபிகள் பாஜ வுக்கு வாக்களித்து வந்தார்கள். ஆனால் இப்போது கூட்டணி இல்லை என அதிமுக தெரிவித்துள்ளது. இதனால் பிரதமர் நரேந்திர மோடி பேசும் கூட்டத்துக்கு நினைத்த அளவில் கூட்டம் சேர்க்க முடியாது என கட்சி மேலிடத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஒவ்வொரு பூத்துக்கும் வசூல் செய்ய ரூ.500 கொண்ட 10 சிலீப் கொண்ட நன்கொடை புக் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு பூத்துக்கும் ரூ.5 ஆயிரம் வசூல் செய்யப்படுகிறது. இந்த பணத்தின் மூலம் ஆட்களை அழைத்து செல்ல வாகனத்திற்கும், தண்ணீர் வழங்கவும் செலவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேவையான உணவு கூட்டம் நடக்கும் இடத்தில் தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பணத்தில் இருந்து அழைத்து செல்லும் ஆட்களுக்கும் பணம் கொடுப்பதாகவும் தெரிகிறது. 5 பாராளுமன்ற தொகுதியில் சுமார் 9 ஆயிரம் பூத்கள் இருக்கும், இதில் மூலம் ரூ.50 லட்சம் வரை வசூல் செய்ய திட்டமிட்டு வசூல் நடைபெற்று வருகிறது.தற்போது வசூல் செய்த ரசீது சமூக வலைதளங்களில் வருகிறது.

The post பிரதமர் திருப்பூர் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்டத்துக்கு ஆட்களை அழைத்து செல்ல ஒரு பூத்துக்குகு ரூ.5 ஆயிரம் வசூல் appeared first on Dinakaran.

Tags : Tiruppur ,Narendra Modi ,Tiruppur district ,Mathapur ,General Assembly ,
× RELATED பல்லடத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4...