- மகோத்ஸவ விழா
- கைலாசநாதர் கோவில்
- மாசி மஹத்
- கலசபாக்கம்
- மாசி மகோத்சவ விழா
- வடாம்பூண்டி
- துரிங்கியபுரம்
- கிரேட்
- சமேத கைலாசநாதர் கோவில்
- நார்த்தாம்பூண்டி கிராமம்
- யூனியன்
கலசபாக்கம்: கலசபாக்கம் அருகே துரிஞ்சாபுரம் ஒன்றியம் நார்த்தாம்பூண்டி கிராமத்தில் நேற்று நடந்த மாசி மகோற்சவ விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். துரிஞ்சாபுரம் ஒன்றியம், நார்த்தாம்பூண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற பெரிய நாயகி அம்மன் சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாசி மகோற்சவ விழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று மாசி மகத்தை முன்னிட்டு அதிகாலை நடை திறக்கப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தீர்த்தவாரி நிகழ்ச்சி அம்மன் கோயில் அருகே உள்ள குளக்கரையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
The post மாசி மகத்தையொட்டி கைலாசநாதர் கோயிலில் மகோற்சவ விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு கலசபாக்கம் அருகே appeared first on Dinakaran.