சென்னை: பெண்களின் உடல்நலத்திற்காக கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செயல்திட்டத்தை காவேரி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. கருப்பைவாய் புற்றுநோய் என்ற அச்சுறுத்தும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கும், சுகாதார சேவைகளைப் அனைவருக்கும் சம அளவில் பெற ஊக்குவிக்கவும் காவேரி மருத்துவமனையின் சார்பில் கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் ஒரு முக்கியமான சுகாதார பிரச்சனையாக கருப்பைவாய் புற்றுநோய் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணற்ற உயிரிழப்புகளுக்கு இது காரணமாக அமைகிறது. மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆம்பெர் ஜேடு இந்த திட்டதை தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தை செயல்படுத்தும் நோக்கத்தோடு மருத்துவமனை வளாகத்தில் இதற்கான பரப்புரை திட்டத்தை நடத்தப்பட்டுள்ளது. காவேரி மருத்துவமனை வாராந்திர அடிப்படையில் முகாம்களை நடத்துகிறது. அங்கு இந்த பரிசோதனைகள் கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும். இந்த நிகழ்வில் பேசிய மேற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் ஆம்பெர் ஜேடு கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோயின் பாதிப்பை கணிசமாக குறைப்பதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டிருக்கிறது. இம்மாநிலத்தில் பெண்கள் மத்தியில் புற்றுநோய்க்கான இரண்டாவது முதன்மை காரணமாக இது இருக்கிறது. எனினும், இது முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படக்கூடிய ஒரு பாதிப்பாகும். ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவது, பரிசோதனைகள் மற்றும் தடுப்பூசி மருந்து ஆகியவற்றின் வழியாக இதனை முற்றிலுமாக ஒழிக்க முடியும். இத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்படுவதற்கு வெகு ஆர்வத்தோடு பணியாற்றியிருக்கின்ற காவேரி மருத்துவமனை நிர்வாகத்தையும் மற்றும் மருத்துவ பணியாளர்கள் குழுவையும் நான் பாராட்ட விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
The post பெண்களின் உடல்நலத்திற்காக கருப்பைவாய் புற்றுநோய் பரிசோதனை செயல்திட்டம்: காவேரி மருத்துவமனை அறிமுகம் appeared first on Dinakaran.