×

துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த துபாய் டூட்டி பிரீ டென்னிஸ் தொடரின் மகளிர் இரட்டையர் பிரிவில் செக் குடியரசின் கேத்தரினா சினியகோவா – ஸ்டோர்ம் ஹன்ட்டர் (ஆஸி.) இணை சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் நிகோல் மெலிசர் மார்டினஸ் – எல்லன் பெரஸ் (ஆஸி.) ஜோடியுடன் நேற்று மோதிய சினியகோவா இணை 6-4, 6-2 என்ற நேர் செட்களில் வென்று கோப்பையை முத்தமிட்டது. இப்போட்டி 1 மணி, 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் ரஷ்யாவின் அன்னா கலின்ஸ்கயா – ஜாஸ்மின் பவோலினி (இத்தாலி) மோதினர்.

The post துபாய் ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றது சினியகோவா ஜோடி appeared first on Dinakaran.

Tags : Siniakova ,Dubai Open ,Dubai ,Czech Republic ,Katarina Siniakova ,Storm Hunter ,Aus ,Dubai Duty Free Tennis Series ,United Arab Emirates ,America ,Nicole Meliser ,Dinakaran ,
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...