×

அரசு பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி

நாமக்கல்: மலை பிரதேசங்களில் அரசு பஸ்களில் மகளிர் கட்டணம் இல்லா பயணம் திட்டம் இன்று (25ம் தேதி) உதகையில் தொடங்க உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். நாமக்கல் போக்குவரத்து கழக பணிமனையில் பணி காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நாமக்கல்லில் நடைபெற்றது. போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை வழங்கி பேசினார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,‘ தமிழகம் முழுவதும் அரசு டவுன் பஸ்களில், மகளிர் கட்டணம் இல்லாமல் பயணித்து வருகின்றார்கள்.

மலை பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அப்பகுதியில் அரசு பஸ்களில் மகளிர் கட்டணம் இல்லா பயணம் செய்யும் திட்டம் நாளை(இன்று) ஊட்டியில் தொடங்கப்படுகிறது. படிப்படியாக மற்ற மலை பிரதேசங்களில் அமல்படுத்தபடும். 500 மின்சார பஸ்கள் வாங்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 100 பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. அவை சென்னையில் இயக்கப்பட உள்ளது. அரசு பஸ்சில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. இந்த விவகாரம் தொடர்பாக 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலி பணியிடங்கள் தேர்தலுக்கு பிறகு நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு பேருந்தில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை: அமைச்சர் சிவசங்கர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Namakkal ,Utagai ,Namakkal Transport Corporation ,Sivasankar ,
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது