×

விஜயதாரணி செய்தது தேசத்துரோகம்: ஜோதிமணி எம்.பி. காட்டம்!

சென்னை: விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம் என காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்; தலைவர் ராகுல்காந்தி நாட்டைக் காக்க இறுதி யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விஜயதரணி காங்கிரஸ் கட்சியில் இருந்துவிலகி பாஜகவில் இணைந்திருப்பது, இந்த தேசத்திற்கு செய்யும் மாபெரும் துரோகம்.

அரசியல் பெண்களுக்கு எப்போதும் போர்க்களம் தான். ஒவ்வொரு நாளும் நெருப்பாற்றை நீந்திதான் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்களின் உழைப்பும், திறமையும், செல்வாக்கும் அவ்வளவு எளிதாக
அங்கீகரிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான். ஆனால் அதற்காக கொண்ட கொள்கையில் சமரசம் செய்துகொள்வதையும், நாம் இவ்வளவு காலம் எதிர்த்து நின்ற பாஜகவின் பாசறைக்குச் செல்வதையும் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post விஜயதாரணி செய்தது தேசத்துரோகம்: ஜோதிமணி எம்.பி. காட்டம்! appeared first on Dinakaran.

Tags : Vijayatharani ,Jyothimani ,Chennai ,Congress party ,BJP ,Congress ,Jyotimani ,President ,Rahul Gandhi ,M.P. ,
× RELATED விளவங்கோட்டில் மல்லுக்கட்டும் பெண் வேட்பாளர்கள்