×

மக்களவைத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை: மக்களவைத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களுக்கு எடப்பாடி அளித்த பேட்டியில் கூறியதாவது,

இன்று முதல் அதிமுக தேர்தல் பிரச்சாரம் தொடக்கம்

மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை இன்று முதல் அதிமுக தொடங்கியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவித்ததும் கூட்டணியை அறிவிப்போம்

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் அதிமுக கூட்டணியை அறிவிப்போம் என்றும் அவர் தெரிவித்தார். “தமிழர் உரிமை மீட்போம்; தமிழ்நாட்டை காப்போம்” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி அதிமுக தேர்தல் பிரச்சாரம் நடைபெறும்.

கூட்டணி பற்றி விஷம பிரச்சாரம் எடப்பாடி கண்டனம்

கூட்டணி பற்றி விஷமத்தனமான பிரச்சாரத்தை பரப்புகின்றனர்; அதனை முற்றுப்புள்ளி வைப்பதற்கான காலம் விரைவில் வரும் என்றும் தெரிவித்தார். அதிமுக சார்பில் வெற்றி பெறுபவர்கள் ஒருமித்த கருத்துடன் செயல்படுவார்கள்.

பாஜகவுடன் அதிமுகவுக்கு ரகசிய உடன்பாடு ஏதுமில்லை

பாஜகவுடன் அதிமுகவுக்கு ரகசிய உடன்பாடு ஏதுமில்லை. தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டி என்பது தேர்தல் வந்தால்தான் தெரியும்.

தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு எதிரி இல்லை-பழனிசாமி

தேர்தல் களத்தில் அதிமுகவுக்கு எதிரி யாரும் இல்லை .

The post மக்களவைத் தேர்தலில் நல்ல கூட்டணி அமையும்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Lok Sabha ,AIADMK ,General Secretary ,Edappadi Palaniswami ,Chennai ,Edappadi ,Lok Sabha election ,
× RELATED ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்