×

கொள்ளிடம் அருகே அதிகாரிகள் முயற்சியால் இடைநின்ற மாணவி மீண்டும் பள்ளியில் சேர்ப்பு

கொள்ளிடம் : கொள்ளிடம் அருகே இடைநின்ற மாணவி அதிகாரிகள் முயற்சியால் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சியை சேர்ந்த சேத்திருப்பு கிராமத்தில் கிருத்திகா என்ற மாணவி பள்ளி செல்லாமல் இடைநின்று இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞான புகழேந்தி, ஆசிரியர் பயிற்றுனர் ஐசக் ஞானராஜ், தலைமை ஆசிரியர் பாலு உள்ளிட்டோர் சேத்த்திருப்பு கிராமத்தில் உள்ள கிருத்திகா என்ற மாணவியின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை செய்த பொழுது இடைநின்று பள்ளி செல்லாமல் இருப்பது உறுதிபடுத்தபட்டது. மாணவியின் பெற்றோரிடம் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. மேலும் மாணவி பள்ளிக்கு செல்லாமல் இருப்பது குடும்பத்திற்கு சுமை என்றும் அவள் படித்தால் சுமை குறையும் என்றும் அனுப்பாமல் இருப்பது சட்டப்படி குற்றம் என்றும் எடுத்துக் கூறப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவி கிருத்திகா அருகில் உள்ள கோதண்டபுரம் மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். அப்போது அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அறிவுரை வழங்கிய மாணவியை மீண்டும் பள்ளியில் சேர்த்தனர். அதனைத் தொடர்ந்து வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஞானபுகழேந்தி கூறும் போழுது தமிழ்நாடு அரசு பெண் கல்வியின் முன்னேற்றத்திற்கு பல நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பெண்களின் கல்வித்தரம் உயர்ந்தால் சமூகத்தில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்.

மாணவியை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருப்பது பெற்றோர்கள் செய்யும் மிகப்பெரிய தவறாகும். என்றும் தமிழ்நாடு அரசு கல்லூரியில் படிக்கும் பெண் பிள்ளைகளுக்கு அரசு மாதம் ரூ 1000 உதவித்தொகை அளித்து வருகிறது. மேலும் 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படிக்கும் அனைத்து பெண் பிள்ளைகளுக்கும்மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டின் மூலம் உயர்கல்விக்கு இட ஒதுக்கீடு கொடுத்துள்ளது.

மேலும் இதுபோன்று ஏராளமான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து வருகிறது.எனவே பெண் குழந்தைகள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். இது போன்ற பள்ளி செல்லா குழந்தைகள் எவரேனும் இருந்தால் உடனடியாக கொள்ளிடம் வட்டார வள மையத்தில் 9788858785 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

The post கொள்ளிடம் அருகே அதிகாரிகள் முயற்சியால் இடைநின்ற மாணவி மீண்டும் பள்ளியில் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : KIRUTIKA ,OF SETHIRUPU ,ALAKUDI URADCHI, ,MAYILADUDHARA DISTRICT ,Dinakaran ,
× RELATED கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன்