×

ஒரே நாளில் அனைத்து நவக்கிரக கோயில்களையும் தரிசிக்கும் வகையில் சிறப்பு பேருந்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர்

கும்பகோணம்: கும்பகோணத்தில் ஒரே நாளில் அனைத்து நவக்கிரக கோயில்களையும் தரிசிக்கும் வகையில் சிறப்பு பேருந்தினை மக்களின் பயன்பாட்டிற்காக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தற்போது மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதால் அவர்கள் தேவைக்கேற்ப பள்ளி, கல்லூரி நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். எந்த இடங்களில் பேருந்துகள் இயக்கம் தேவை என்று தெரிவித்தால் அவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார்.

The post ஒரே நாளில் அனைத்து நவக்கிரக கோயில்களையும் தரிசிக்கும் வகையில் சிறப்பு பேருந்து தொடங்கி வைத்தார் அமைச்சர் சிவசங்கர் appeared first on Dinakaran.

Tags : Minister ,Sivashankar ,Navagraha ,Kumbakonam ,Transport Minister ,
× RELATED வேடசந்தூர் அருகே பட்டாசுகள் ஏற்றி வந்த லாரி பள்ளத்தில் கவிழ்ந்தது