×

காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 2 பேர் கைது வனத்துறை நடவடிக்கை திருவண்ணாமலை அருகே

திருவண்ணாமலை,பிப்.24: திருவண்ணாமலை அருகே சொரங்களத்தூர் காப்புக்காடு பகுதியில், காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 2 பேரை வெடிகுண்டுகளுடன் வனத்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை அடுத்த சொரங்களத்தூ காப்புக்காடு பகுதியில், வனச்சரக அலுவலர் சரவணன் தலைமையில் நேற்று வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பைக்கில் காட்டுப்பன்றியை வேட்டையாடி எடுத்துச்சென்றதை வனத்துறையினர் பார்த்து விரட்டிச்சென்று அவர்களை மடக்கிப் பிடித்தனர். மேலும் காட்டுப்பன்றிகளை வேட்டையாட பயன்படுத்தும் 6 நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, சொரங்களத்தூர் பகுதியை சேர்ந்த காசி மகன் தங்கம், மூர்த்தி மகன் சஞ்சய் ஆகிய இருவரையும் கைது செய்து, திருவண்ணாமலை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post காட்டுப்பன்றிகளை வேட்டையாடிய 2 பேர் கைது வனத்துறை நடவடிக்கை திருவண்ணாமலை அருகே appeared first on Dinakaran.

Tags : Forest Department ,Thiruvannamalai ,forest ,Sorangalathur reserve ,Forest Officer ,Saravanan ,Sorangalathoo reserve forest ,boars ,Tiruvannamalai ,
× RELATED கொல்லிமலை காப்புக்காட்டில் சுற்றுலா...