×

பா.வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் கடந்த 2001-06-ம் ஆண்டுகளில் நடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பா.வளர்மதி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் தொடர்பான வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார். நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் விசாரணைக்கு எதிராகவும், அதற்கு தடை விதிக்க கோரியும் வளர்மதி தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹெச் ராய் மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வளர்மதி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மற்ற முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் போன்றது இந்த வழக்கு கிடையாது. இது வேறு சாராம்சங்களை கொண்டது என தெரிவித்தார். வாதங்களை கேட்ட நீதிபதிகள், ‘‘வளர்மதி தொடர்பான வழக்கை இறுதி விசாரணைக்கு ஒத்தி வைப்பதாகவும், இருப்பினும் அதுவரை உயர் நீதிமன்றத்தில் இருக்கும் விசாரணைக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.

The post பா.வளர்மதிக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்காலத்தடை: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,B. Valarmathi ,New Delhi ,Ananda Venkatesh ,High ,Court ,P. Valarmathi ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு