×

2வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி: தொடரை கைப்பற்றியது

ஆக்லாந்து: நியூசிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், 72 ரன் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. ஈடன் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. ஆஸ்திரேலியா 19.5 ஓவரில் 174 ரன் எடுத்து ஆல் அவுட்டானது. தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 45 ரன், கம்மின்ஸ் 28, கேப்டன் மிட்செல் மார்ஷ் 26, டிம் டேவிட் 17, ஸ்மித், நாதன் எல்லிஸ்* தலா 11 ரன் எடுத்தனர். நியூசிலாந்து பந்துவீச்சில் பெர்குசன் 4, ஆடம் மில்னி, பென் சியர்ஸ், சான்ட்னர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 17 ஓவரில் 102 ரன்னுக்கு சுருண்டு 72 ரன் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. கிளென் பிலிப்ஸ் 42, போல்ட் 16, கிளார்க்சன் 10 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர். கான்வே காயம் காரணமாக பேட் செய்யவில்லை. ஆஸி. பந்துவீச்சில் ஆடம் ஸம்பா 4, நாதன் எல்லிஸ் 2, ஹேசல்வுட், கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கம்மின்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.ஆஸி. அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றிய நிலையில், கடைசி டி20 ஆக்லாந்தில் நாளை காலை 5.30க்கு தொடங்குகிறது.

The post 2வது டி20 போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி: தொடரை கைப்பற்றியது appeared first on Dinakaran.

Tags : Australia ,2nd T20I ,Auckland ,New Zealand ,Eden Park ,2nd T20I: ,Dinakaran ,
× RELATED ஆஸி. ஷாப்பிங் மாலில் கத்தி குத்து...