×

ஆர்.கே.பேட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க விழா

பள்ளிப்பட்டு: ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவய் கிராம ஊழியர் சங்க கொடி ஏற்றிவைக்கப்பட்டு கல்வெட்டு திறந்து வைக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் .ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் ஆர்.கே.பேட்டை வட்ட கிளை சார்பில் சங்கக்கொடி மற்றும் கல்வெட்டு திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அச் சங்கத்தின் வட்டத் தலைவர் செல்வம் தலைமை வகித்தார்.

நிர்வாகிகள் தாமோதரன், வெங்கடேசன், குப்பன், லதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் முனுசாமி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் அச்சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ரவி பங்கேற்று சங்க கொடி ஏற்றிவைத்தார். ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் விஜயகுமார் சங்க கல்வெட்டு திறந்துவைத்தார். இதனை தொடர்ந்து வட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அச்சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் ஹேமாத்திரி நன்றி கூறினார்.

The post ஆர்.கே.பேட்டையில் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்க விழா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Revenue Village Staff Association ,RK Pettai ,PALLIPATTA ,RK Pettah District Collector ,Thiruvallur District ,RK Pettai District Branch ,RK Pettai District Collector ,Dinakaran ,
× RELATED ஆர்.கே.பேட்டை அருகே ரூ.5.50 கோடியில் உயர்மட்ட மேம்பால பணி: எம்.எல்.ஏ ஆய்வு