×

ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாத அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கு தள்ளுபடி..!!

மதுரை: ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாத அதிகாரிகள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் சொத்து ஆக்கிரமிப்பை அகற்றும் ஆணையை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிப்பை அகற்றும் அதிகாரம் உள்ள அதிகாரி பெயரை மட்டும் வழக்கில் சேர்க்க உத்தரவிட்டு, திருத்தொண்டர் சபையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த வழக்கை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது.

The post ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற ஆணையை நிறைவேற்றாத அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கு தள்ளுபடி..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,High Court ,Karur Kalyana Pasupadeeswarar Temple ,Dinakaran ,
× RELATED மதுரை கோயில் செங்கோல் வழக்கு: தனி...