×

சைக்கிள் சின்னம் கோரிய ஜி.கே.வாசனின் வழக்கு முடித்துவைப்பு

சென்னை: மக்களவை தேர்தலில் த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் கோரிய ஜி.கே.வாசனின் வழக்கை ஐகோர்ட் முடித்துவைத்தது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக மக்களவை பொதுத்தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாகவே முடிவு செய்யப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தமிழ் மாநில காங்கிரசின் மனு பரிசீலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அதனை தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரசின் மனுவை முன்னுரிமை அளித்து தகுதியின் அடிப்படையில் பரிசீலிக்க உத்தரவிட்டு மனு முடித்துவைக்கப்பட்டுள்ளது.

The post சைக்கிள் சின்னம் கோரிய ஜி.கே.வாசனின் வழக்கு முடித்துவைப்பு appeared first on Dinakaran.

Tags : GK Vasan ,CHENNAI ,ICourt ,DMK ,Lok Sabha ,Tamil State Congress Party ,Lok Sabha general election ,G.K.Vasan ,Dinakaran ,
× RELATED 5 நொடி வாக்கு நம் நாட்டின் 5 ஆண்டு கால வளர்ச்சி: ஜி.கே.வாசன் பேட்டி