×

கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்

கோவை: கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லுாரி மாணவி மற்றும் பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாச ‘வீடியோ’ எடுத்து துன்புறுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. சம்பவம் தொடர்பாக பொள்ளாச்சி போலீசார் முதலில் 5 பேரை கைது செய்த நிலையில் வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றபட்டது. பின்னர் சிபிஐக்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2021-ல் 9 பேர் மீது கூட்டு பாலியல் பலாத்காரம், கடத்தல், கூட்டுச்சதி உள்ளிட்ட 10 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டது.

வழக்கில் இதுவரை திருநாவுக்கரசு, சபரிராஜன் உட்பட 9 பேரை கைது செய்த போலீசார் சேலம் சிறையில் அடைத்தனர். 2 ஆண்டுகளாக காணொளி காட்சி வாயிலாக விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பின் பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைதானவர்கள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். வழக்கில் சிபிஐ சேகரித்த கூடுதல் வீடியோ ஆதாரங்கள் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளது. வழக்கில் கைப்பற்றப்பட்ட வீடியோ ஆதாரங்கள் குறித்து விசாரணை நடைபெற உள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 9 பேர் ஆஜர்படுத்தப்பட்டனர். சபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன், அருளானந்தம், ஹெரன் பால், பாபு, அருண்குமார் ஆகியோர் ஆஜர் படுத்தப்பட்டனர். விரைவில் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post கோவை பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore court ,Pollachi ,
× RELATED கோவை, பொள்ளாச்சி தேர்தல் பணிகளை கண்காணிக்க மேற்பார்வையாளர்கள் நியமனம்