×

சமயபுரம் மாரியம்மன் வழிபாடு

உலகத்தை காக்கும் சத்தி தான் மாரியம்மன். அதிலும் சமயபுரத்தில் அமர்ந்திருக்கும் இந்த மாரியம்மன் சப்த கன்னியர்களையும் தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளார். தினமும் இவளை நினைத்து வீட்டில் வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் நம் பக்கம் நெருங்க கூட செய்யாது. எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் அப்படியே தூசி தும்பு போல தட்டி விட்டு செல்லலாம். அந்த அளவுக்கு நமக்கு மன வலிமையை கொடுக்கக்கூடிய வழிபாடு தான் இந்த சமயபுரத்தாள் வழிபாடு. துன்பங்கள் தீர இவளை தினமும் எப்படி மனதில் நினைத்து எந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்வது ஆன்மீகம் சார்ந்த பதிவு இதோ உங்களுக்காக.

சமயபுரத்து மாரியம்மன் வழிபாடு காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளிச்சிடுங்க. வழக்கம்போல பூஜை அறையில் விளக்கு ஏத்திடுங்க. குலதெய்வத்தை நினைச்சுக்கோங்க. அடுத்து சமயபுரத்து அம்மனை மனதார நினைச்சுக்கோங்க சமயபுரத்து அம்மனை இவர்கள்தான் கும்பிடனும், இவர்கள் கும்பிடக் கூடாது என்ற எந்த கட்டுப்பாடும் கிடையாது. இந்த பூமியில் இருக்கும் ஊன் உயிர் எல்லாமே அந்த அம்பாள் படைத்தது தான். அவளை மனதார நினைத்து பின் சொல்லக் கூடிய மந்திரத்தை சொல்லுங்க. பூஜை அறையில் ஒரு விரிப்பு விரித்து அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லலாம். ‘ஓம் ஹ்ரீம் நமஹ’ என்ற மந்திரத்தை முதலில் ஒன்பது முறை சொல்லிடுங்க. அடுத்து ‘ஓம் சித்ராயை நமஹ’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்க.

48 நாட்கள் தொடர்ந்து தினமும் காலையில் எழுந்து சமயபுரத்து மாரியாம்மனை நினைத்து இந்த மந்திரத்தை நம்பிக்கையுடன் சொல்பவர்களுடைய வீட்டில் வறுமை என்பதே நிச்சயம் இருக்காது. கஷ்டம் இருக்காது. 48 நாட்களில் உங்கள் வீட்டில் என்ன அதிசயம் நடக்கிறது என்பதை நீங்களே உணர்வீர்கள். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் சிறியவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். உங்கள் மனதில் இருக்கும் எந்த கஷ்டத்தை வேண்டும் என்றாலும் அம்பாளிடம் சொல்லி அந்த கஷ்டம் 48 நாட்களுக்குள் சரியாக வேண்டும் என்று பிரார்த்தனை வைக்கலாம். வீட்டு பெண்களுக்கு 48 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை செய்ய முடியாது.

இடையில் மாதவிலக்கு ஏற்படும். அவர்கள் பூஜை அறையில் விளக்கு ஏற்றாதீர்கள். ஆனால் காலையில் எழுந்து வழக்கம் போல குளித்துவிட்டு வீட்டில் பூஜை அறை தவிற வேறு ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து இந்த மாரியம்மனை நினைத்து, இந்த மந்திரத்தை மனசார உச்சரிக்கலாம். தவறே கிடையாது. மாரியம்மன், பெண்ணின் சொரூபம் தான். நீங்கள் அவருடைய நாமத்தை தீட்டு காலத்தில் சொல்வதால் எந்த பாதிப்பும் வந்து விடப் போவது கிடையாது. இந்த மந்திரத்தை உச்சரிக்க பெண்களுக்கு தீட்டு ஒரு தடை கிடையாது. 48 நாட்களும் நீங்கள் இந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்து பாருங்கள். உங்கள் கஷ்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அந்த அம்பாளே பெண் வடிவம் எடுத்து உங்கள் வீட்டிற்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அந்த அளவுக்கு நம்பி இந்த பரிகாரத்தை செய்பவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் வெற்றி அடைவீர்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

The post சமயபுரம் மாரியம்மன் வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Mariamman ,Satti ,Dinakaran ,
× RELATED சமயபுரம் மாரியம்மன் கோயில்...