×

விராலிமலை அருகே பயங்கர காட்டுத் தீ

 

விராலிமலை,பிப்.23: விராலிமலை அருகே நேரிட்ட காட்டுத்தீயை இலுப்பூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று நீரை பீச்சி அடித்து அணைத்ததால் தீ அக்கம் பக்கம் நிலங்களுக்கு பரவாமல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது இதனால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது. விராலிமலை அருகே உள்ள வடுகபட்டி ஊராட்சி, தேத்தாம்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் அவருக்கு சொந்தமான சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் உள்ள நஞ்சை இடத்தில் முட்செடிகள், புதர்கள், புற்கள் மண்டி கிடந்தன.

இந்நிலையில் வியாழக்கிழமை மதியம் திடீரென முட்செடிகள் பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு சீனிவாசன் தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக நிகழ்வு இடத்திற்கு விரைந்து வந்து நீரை பீச்சி அடித்தும், இலை, செடி கொடிகளை கொண்டு தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உடனடியாக தீ அணைக்கப்பட்டதால் மற்ற நிலங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனால் பெரிய அளவில் சேதம் தவிர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

The post விராலிமலை அருகே பயங்கர காட்டுத் தீ appeared first on Dinakaran.

Tags : Viralimalai ,Ilupur fire ,Dinakaran ,
× RELATED இலுப்பூர் அருகே மணல் கடத்த பயன்படுத்திய லாரி பறிமுதல்