×

ஊராட்சி தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

 

மயிலாடுதுறை, பிப்.23: மயிலாடுதுறையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்து ஊராட்சி தலைவர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தாட்கோ மேலாளர் பரிமளா, சிறப்பு விருந்தினர் டிஎஸ்பி கலைகதிரவன், கலந்துகொண்டு வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்தும், அதில் உள்ள சட்ட நுணுக்கங்கள், எந்த அடிப்படையில் இந்த சட்டத்தின் கீழ் வழக்கு
பதிவு செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்கி பேசினார்.

தொடர்ந்து பயிற்சியாளர் கார்த்திக்கனிராஜ் வன்கொடுமை தடுப்புச்சட்டம் குறித்தும், ஆதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து தெரிவித்தார். கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டினால் அவர்களுக்கு அபராதம் விதிப்பதில் தவறு இல்லை. இந்த தவறை கலெக்டர் ஆகிய நான் செய்தால் கூட தயக்கம் இன்றி அபராதம் விதிக்க வேண்டும்.

The post ஊராட்சி தலைவர்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் appeared first on Dinakaran.

Tags : -Violence Law Awareness ,Panchayat ,Mayiladuthurai ,District Adi Dravidar and Tribal Welfare Department ,Adi Dravidar ,Welfare Officer ,Suresh ,
× RELATED வாக்களிக்க பணம் தர இருப்பதாக புகார் ஊராட்சி மன்ற தலைவி வீட்டில் ரெய்டு