×

சைகை மூலம் பெண்ணை அழைத்தவர் கைது

சேலம், பிப்.23: சேலம் குகை சீரங்கன் தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(54). இவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரிடம் சைகை மூலம் தவறாக அழைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண், அவரை கண்டித்தார். ஆனாலும் அவர் கேட்காமல் தொடர்ந்து இவ்வாறு சைகை மூலம் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த அப்பெண், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ரமேசை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post சைகை மூலம் பெண்ணை அழைத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Salem ,Ramesh ,Salem Cave Seerangan Street ,
× RELATED சேலம் பனமரத்துப்பட்டியில் இரவுப்...