×

டாக்டர்கள் எழுதும் பரிந்துரை சீட்டுகள் நோயாளிகளுக்கு புரியும் வகையில் கேப்பிடல் எழுத்தில் இருக்க வேண்டும்: மருத்துவத்துறை அறிவுறுத்தல்

சென்னை: மருத்துவர்கள் பரிந்துரை சீட்டுகளில், நோயாளிகளுக்கு புரியும் வகையில் கேப்பிடல் எழுத்தில் எழுத அறிவுறுத்தப்பட்டுள்ளது. டாக்டர்களின் கையெழுத்து பெரும்பாலும் படிக்க முடியாததாக உள்ளது. இதனால் பார்மசியில் மருந்துகளை பற்றிய விவரம் தெரியாதவர்கள் டாக்டர் கூறியுள்ள மருந்துகளுக்குப் பதிலாக வேறொன்றை மாற்றித் தரும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துச் சீட்டில் மருந்து, மாத்திரைகளின் பெயர்களை கேப்பிடல் லெட்டரில் எழுத வேண்டும் என்று இந்திய மருத்துவ கவுன்சிலின் (எம்.சி.ஐ) உத்தரவு இருக்கிறது. ஆனால் இதை பெரும்பாலான டாக்டர்கள் பின்பற்றுவதில்லை. இந்த நிலையில் நோயாளிகளுக்கு நோய் தொடர்பான மருந்துகள் குறித்து, மருத்துவர்கள் எழுதும் பரிந்துரை சீட்டுகளில், நோயாளிகளுக்கு புரியும் வகையில் தெளிவாகவும், கேப்பிடல் (CAPITAL) எழுத்தில் இருக்க வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம் அறிவுறுத்தி உள்ளது. மருத்துவர்கள் அனைவரும் இதனை கட்டயம் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு உள்ளது.

The post டாக்டர்கள் எழுதும் பரிந்துரை சீட்டுகள் நோயாளிகளுக்கு புரியும் வகையில் கேப்பிடல் எழுத்தில் இருக்க வேண்டும்: மருத்துவத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED கனிமவள கொள்ளைக்கு உடந்தையாக...