×

சாதிவாரி கணக்கெடுப்புக்கு அரசு அறிவிப்பாணை: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அறிவிப்பாணையை உடனடியாக வெளியிட வேண்டும். பீகார் மாநிலத்தை பின்பற்றி, கர்நாடகா, ஒடிசா, ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கியிருக்கும் நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் மாநிலத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கிறார். எனவே, ஒன்றிய அரசை காரணம் காட்டி இனியும் காலம் தாழ்த்தாமல், சமூகத்தில் பின் தங்கிய மக்களையும், அவர்களின் மூலமாக நாட்டின் வளர்ச்சிக்கும் அவசியமான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான உத்தரவை பிறப்பித்து அதற்கான பணிகளை உடனடியாக அரசு தொடங்க வேண்டும்.

The post சாதிவாரி கணக்கெடுப்புக்கு அரசு அறிவிப்பாணை: டிடிவி தினகரன் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Govt ,TTV ,Dhinakaran ,CHENNAI ,AAMUK ,general secretary ,DTV ,Twitter ,Bihar ,Karnataka ,Odisha ,Andhra ,Telangana ,
× RELATED சொல்லிட்டாங்க…