×

காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: ஒன்றிய அரசு திடீர் உத்தரவு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கி ஒன்றிய அரசு திடீரென உத்தரவு பிறப்பித்து உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு நாடு முழுவதும் இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.

சிஆர்பிஎப் கமாண்டோக்கள் அகில இந்திய அடிப்படையில் கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்குவார்கள் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இனிமேல் கார்கே பயணத்தில் சுமார் 30 சிஆர்பிஎப் கமாண்டோக்கள், மூன்று ஷிப்டுகளில் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள். மேலும் குண்டு துளைக்காத வாகனம், பைலட், எஸ்கார்ட் வாகனங்களும் இதில் இடம் பெறும்.

The post காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு: ஒன்றிய அரசு திடீர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Congress ,Kharge ,Union ,New Delhi ,Union government ,Lok Sabha elections ,Union Home Ministry ,President ,Mallikarjun Kharge ,Dinakaran ,
× RELATED பாஜவால் ஏற்படுத்தப்பட்ட வேலையில்லா...