×

பாஜவிற்கு கமல்நாத் தேவையில்லை: ம.பி. அமைச்சர் கருத்து

ஜபல்பூர்: பாஜவிற்கு கமல்நாத் தேவையில்லை என்றும் அதன் கதவுகள் அவருக்கு மூடப்பட்டுள்ளதாகவும் மத்தியப்பிரதேச அமைச்சர் விஜய்வர்கியா தெரிவித்துள்ளார். மத்தியப்பிரதேச மாநில முன்னாள் முதல்வரான கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜவில் இணையவுள்ளதாக செய்திகள் பரவி வருகின்றது. கமல்நாத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்த யூகங்கள் வலுத்து வரும் நிலையில், கமல்நாத் மற்றும் அவரது மகனான எம்பி நகுல் நாத் ஆகியோர் கடந்த வாரம் டெல்லியில் முகாமிட்டு இருந்தனர்.

இதனால் இருவரும் பாஜவில் இணையக்கூடும் என்று உறுதியாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் மத்தியப்பிரதேசத்தின் ஜபல்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா கூறுகையில், ‘‘எங்களது கட்சிக்கு கமல்நாத் தேவையில்லை. அதனால் தான் அவருக்கு அதன் கதவுகள் மூடப்பட்டுள்ளது” என்றார்.

The post பாஜவிற்கு கமல்நாத் தேவையில்லை: ம.பி. அமைச்சர் கருத்து appeared first on Dinakaran.

Tags : BJP ,Kamal Nath ,MP Minister ,Jabalpur ,Madhya ,Pradesh ,Minister ,Vijayvargiya ,Former ,Madhya Pradesh ,Chief Minister ,Congress party ,M.P. Minister ,
× RELATED ரூ.1,500 கோடி சொத்துகளை மறைத்துள்ளதாக...