×

மக்களுக்கு பாஜ மீது நம்பிக்கை: ராஜ்நாத் சிங் சொல்கிறார்

நபரங்பூர்: தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி பொதுமக்களின் நம்பிக்கையை பாஜ பெற்றுள்ளதாக ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஒடிசாவிற்கு ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒரு நாள் பயணமாக நேற்று சென்று இருந்தார். அப்போது நபரங்பூர், கலஹண்டி, கோராபுட் மற்றும் போலாங்கிர் ஆகிய 4 மக்களவை தொகுதிகளின் கட்சி தொண்டர்களிடையே அவர் உரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் ராஜ்நாத்,‘‘தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றாததால் அரசியல்வாதிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். பாஜ பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்களின் நம்பிக்கையை வென்றது. இதனால் அரசியலில் நம்பகத்தன்மை நெருக்கடி முடிவுக்கு வந்துள்ளது. பிரதமர் மோடி மீது மக்கள் தற்போது நம்பிக்கை வைத்துள்ளனர்” என்றார்.

The post மக்களுக்கு பாஜ மீது நம்பிக்கை: ராஜ்நாத் சிங் சொல்கிறார் appeared first on Dinakaran.

Tags : BJP ,Rajnath Singh ,Nabarangpur ,Union Defense Minister ,Odisha ,
× RELATED திருவாரூரில் ராஜ்நாத் சிங்...