×

வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி

புதுடெல்லி: ஒன்றிய நுகர்வோர் விவகாரத்துறை செயலாளர் ரோஹித் குமார் சிங் கூறுகையில், ‘‘வங்கதேசத்திற்கு 50,000 டன் வெங்காயம், மொரீஷியஸ்க்கு 1,200 டன், பக்னுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதித்துள்ளது. வரும் 31ம் தேதி வரை வர்த்தகர்கள் ஏற்றுமதி செய்யலாம். ஒன்றிய வெளியுறவு துறையின் பரிந்துரை அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.கடந்த ஆண்டு வெங்காய விலை உயர்வை கட்டுப்படுத்த மார்ச் 31ம் தேதி வரை வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்தது.

The post வெங்காய ஏற்றுமதிக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Union Consumer Affairs ,Rohit Kumar Singh ,Bangladesh ,Mauritius ,Bagan ,Bhutan ,Dinakaran ,
× RELATED ஊழல் வழக்கில் சிக்கிய பின் பாஜகவால் ‘புனிதம்’ அடைந்த பிரபலங்கள்