×

அரியானா கலவரம் காங். எம்எல்ஏ மீது உபா சட்டம் பாய்ந்தது

நூஹ்: அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூலையில் விஸ்வ இந்து பரிஷத் நடத்திய ஊர்வலம் ஒரு கும்பலால் தாக்கப்பட்டது. இதை தொடர்ந்து நூஹ்வில் கலவரம் வெடித்தது. இந்த மோதலில் இரண்டு ஊர்காவல் படை வீரர்கள்,ஒரு மத குருமார் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். கலவரம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவி பல நாட்கள் பதற்றம் ஏற்பட்டது.

இதில் கலவரத்தை தூண்டியதாக காங்கிரஸ் எம்எல்ஏ மம்மன் கான் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கோர்ட் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் மம்மன் கான் மீது பயங்கரவாத எதிர்ப்பு சட்டமான உபா சட்டத்தின் கீழ் போலீசார் குற்றச்சாட்டுகளை சேர்த்துள்ளனர் என்று அவரது வழக்கறிஞர் தாஹிர் உசைன் ரூபாரியா தெரிவித்தார்.

The post அரியானா கலவரம் காங். எம்எல்ஏ மீது உபா சட்டம் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Nooh ,Visva Hindu Parishad ,Ariana ,Riots ,Nuh ,Home Guard ,Dinakaran ,
× RELATED அரியானாவில் ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்