×

தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன்

சென்னை: காவிரி ஆணையமே கூடாததால் அதிமுக ஆட்சியில் பிரச்சனை வரவில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு துரைமுருகன் பதில் அளித்தார். காவிரி மேலாண்மை ஆணையத்தில் கடந்த 11-ம் தேதி நடந்த கூட்டத்தில் மேகதாது பற்றி விவாதிக்க தமிழ்நாடு அரசு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதால் மேகதாது குறித்து விவாதிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது தமிழ்நாடு அரசின் எதிர்ப்பை மீறியே காவிரி மேலாண்மை ஆணையம் மேகதாது குறித்து விவாதித்தது. தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.

The post தமிழ்நாட்டின் ஒப்புதல் பெறாமல் ஒரு செங்கலை கூட கர்நாடகா எடுத்து வைக்க முடியாது: அமைச்சர் துரைமுருகன் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Tamil Nadu ,Minister ,Duraimurugan ,Chennai ,Edappadi Palanisami ,Atamuga ,Kaviri Commission ,Government of Tamil Nadu ,Caviar Management Commission ,Dinakaran ,
× RELATED தமிழக – கர்நாடக எல்லையில் தீவிர வாகன தணிக்கை