×

மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து

திருச்சி: திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு அசைவ உணவகத்தில் மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் உணவுப்பொருட்கள் மற்றும் பாத்திரங்கள் எரிந்து சேதமானது.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ராயல் சாலையில் ஹாட் சிக்கன் என்ற உணவகம் உள்ளது. இந்நிலையில் நேற்று உணவகம் செயல்பட்டு கொண்டிருந்தது. அப்போது மாலை மின் கசிவு காரணமாக உணவகத்திலுள்ள சமையல் அறையில் தீப்பற்றி எரிந்தது. இந்த தீயானது உணவகத்தில் பரவத் துவங்கியது. இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முற்பட்டனர்.
அதற்குள் உணவகத்தில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் சமையல் உபகரணம் தீயில் எரிந்து சேதமானது. இந்நிலையில் உணவகம் எதிரே உள்ள ராணுவத்திற்கு சொந்தமான மிலிட்டரி கேண்டீனில் உள்ள ஊழியர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் தீயணைப்பு உபகரணத்தை பயன்படுத்தி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் திருச்சி மாவட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மின் கசிவால் அசைவ உணவகத்தில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Trichy ,Trichy Central Bus ,Royal Road ,Dinakaran ,
× RELATED ஓடும் பஸ்சில் மயங்கி விழுந்து வாலிபர் பலி