×

பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு

சேலம், பிப்.22: சேலத்தில் போலி ஆவணம் தயாரித்து நில மோசடி செய்த பெண் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். சேலம் இரும்பாலை அருகே உள்ள அய்யம்பெருமாம்பட்டியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (50). இவருக்கு அப்பகுதியில் 114 சென்ட் நிலம் உள்ளது. அவரது உறவினரான அய்யந்துரை என்பவர் போலி ஆவணம் தயாரித்து கடந்த 2020ம் ஆண்டு அவரது மகன் வீரமணி பெயரில் அந்நிலத்தை பதிவு செய்துள்ளார். இதுபற்றி சிவக்குமார், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் அய்யந்துரை, வீரமணி, மருமகள் கவிதா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெண் உள்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Salem ,Sivakumar ,Ayyamperumambatti ,Salem Irumpalai ,
× RELATED வாலிபரை தாக்கியவர் கைது