×

மிக்ஜாம் புயல், பெருமழையால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் 15,471 பேருக்கு ரூ.26.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல்

சென்னை: கூட்டுறவுத்துறையின் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம் மூலம் மிக்ஜாம் புயல் மற்றும் பெருமழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 15,471 சிறுவணிகர்களுக்கு ரூ.26.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேற்று வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயல், பெருமழையால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களின் தொழில் பயன்பாட்டிற்கான இயந்திரங்களை பழுதுபார்க்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் முதலமைச்சரின் சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம் எனும் புதிய கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு 17.2.2024 வரை ரூ.10,000 வரையிலான கடன்களை 11,949 சிறுவணிகர்கள் ரூ.1,194.35 லட்சம் அளவிற்கும், ரூ.10,001 முதல் ரூ.1,00,000 வரையிலான கடன்களை 3480 சிறுவணிகர்கள் ரூ.1383.77 லட்சம் அளவிற்கும், இதுமட்டுமின்றி ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேலான கடன்களை 42 சிறுவணிகர்கள் ரூ.43.00 லட்சம் அளவிற்கும் ஆக மொத்தம் 15,471 சிறுவணிகர்கள் ரூ.26.21 கோடி அளவிற்கு கடன் பெற்று பயனடைந்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சிறப்பு கடன் முகாம்களில், சிறுவணிகர்கள் வங்கிக் கிளைகளை நேரில் அணுகியோ அல்லது உரிய ஆவணங்கள் மற்றும் விவரங்களை கூட்டுறவுத் துறையின் வலைதளத்தில் உள்ள இணையவழி விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பித்தோ பயனடையலாம்.

The post மிக்ஜாம் புயல், பெருமழையால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்கள் 15,471 பேருக்கு ரூ.26.21 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தகவல் appeared first on Dinakaran.

Tags : Cyclone Mijam ,Minister ,KR Periyakaruppan ,Chennai ,Mijam ,Chief Minister ,KR Periyagaruppan ,Minister for Cooperatives ,KR. Periyakaruppan ,Dinakaran ,
× RELATED காரைக்குடியில் என்என்எல் டிரைவ்...