- ஆஸ்திரேலிய வீரர்களான
- டி 20
- நியூசிலாந்து
- மார்ஷ்
- டேவிட் அதிரடி
- வெலிங்டன்
- ஆஸ்திரேலியா
- டி 20 ஐயில்
- டேவிட்
- தின மலர்
வெலிங்டன்: நியூசிலாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், 216 ரன் என்ற கடினமான இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது. நியூசிலாந்து சென்றுள்ள ஆஸி. அணி டி20 (3 போட்டி), டெஸ்ட் தொடரில் (2 போட்டி) விளையாடுகிறது. வெலிங்டன், ஸ்கை அரங்கில் நேற்று நடந்த முதல் டி20ல், டாஸ் வென்ற நியூசி. முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. ஃபின் ஆலன் 32 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்), கான்வே 63 ரன் (46 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்), ரச்சின் ரவிந்திரா 68 ரன் (35 பந்து, 2 பவுண்டரி, 6 சிக்சர்) விளாசினர்.
நியூசிலாந்து 20 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 215 ரன் குவித்தது. கிளென் பிலிப்ஸ் 19 ரன், மார்க் சாப்மன் 18 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸி. தரப்பில் ஸ்டார்க், கம்மின்ஸ், கேப்டன் மிட்செல் மார்ஷ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதைத் தொடர்ந்து, 216 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸி. களமிறங்கியது. தொடக்க வீரர்கள் ஹெட் 24 ரன், வார்னர் 32 ரன் (20 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), மேக்ஸ்வெல் 25 ரன் (11 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), ஜோஷ் இங்லிஸ் 20 ரன் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். பரபரப்பான கடைசி கட்டத்தில் 19 பந்தில் 44 ரன் தேவை என்ற நிலையில், கேப்டன் மார்ஷ் – டிம் டேவிட் இணை பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்க விட்டு கடைசி பந்தில் த்ரில் வெற்றியை வசப்படுத்தியது.
ஆஸ்திரேலியா 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசியை வீழ்த்தியது. மார்ஷ் 72 ரன் (44 பந்து, 2 பவுண்டரி, 7 சிக்சர்), டிம் டேவிட் 31 ரன்னுடன் (10 பந்து, 2 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. தரப்பில் சான்ட்னர் 2, ஆடம் மில்னே, பெர்குசன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். ஆல்ரவுண்டராக அசத்திய மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஆஸி. 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டி20 ஆக்லாந்தில் நாளை நடக்கிறது.
The post நியூசிலாந்துடன் முதல் டி20 கடைசி பந்தில் ஆஸி. த்ரில் வெற்றி: மார்ஷ், டேவிட் அதிரடி appeared first on Dinakaran.