×

மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு.. மகளிர் கல்லூரி மாணவிகள் அசத்தல்

நெல்லை: மாதவிடாய் என்பது தீட்டு அல்ல என்பதை உணர்த்தும் வகையில் திருநெல்வேலி ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் ஐந்தாயிரம் பேர் சின்னமாக அணிவகுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அக்னிசிறகுகள் மற்றும் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி இனைந்து world Largest human image of menstruation symbol யை 4500/- மாணவிகள் கொண்டு வடிவமைக்கப்பட்டது, இந்த நிகழ்வின் நோக்கம் மாதவிடாய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவது மேலும் தமிழக அரசிடம் மூன்று கோரிக்கை வைத்துள்ளது.
1. மாதவிடாய் சமயத்தில் வேலைக்கு செல்லும் அனைத்து பெண்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் அல்லது வேலை செய்யும் பகுதியில் ஓய்வு எடுக்க வசதி செய்து தர வேண்டும்.

2. பள்ளி மற்றும் கல்லூரியில் Napkins and disposal machine வைப்பதை கட்டாயமாக்கப்பட வேண்டும்.

3.பொதுவெளியில், கடைகளிள் மாதவிடாய் ஒன்றும் தீட்டல்ல என்ற வாசகம் இடம்பெற வேண்டும்.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினரகள் கலந்து கொண்டார்கள். அக்னிச்சிறகுகள் நிறுவனர் பிரபு மற்றும் கல்லூரி முதல்வர் மைதிலி ஒருக்கினைத்து நடத்தினார்கள்.

The post மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு.. மகளிர் கல்லூரி மாணவிகள் அசத்தல் appeared first on Dinakaran.

Tags : Nellie ,Tirunelveli ,Rani Anna Government Women's College ,Dinakaran ,
× RELATED பண பலத்தை நம்பி தேர்தலில் நிற்கும் பாஜ: -எஸ்டிபிஐ தலைவர்