×

தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.. பிரதமர் வேட்பாளர் இன்றி அதிமுக வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!!

மதுரை: தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்;

அதிமுக கூட்டணி அமைப்பதில் தாமதம்: எடப்பாடி பழனிசாமி விளக்கம்
தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். பாமக, தேமுதிக உடன் அதிமுக கூட்டணி பேச்சு நடத்துகிறதா என்ற கேள்விக்கு எடப்பாடி நேரடியாக பதில் அளிக்க மறுத்து விட்டார். திமுக கூட்டணியை இறுதி செய்துவிட்டதா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

பின்னர், தேர்தலுக்கு முன் கூட்டணிகளில் மாற்றம் வரலாம். கூட்டணிக்கு அதிமுக காத்திருப்பா என்ற கேள்விக்கு அனைத்து கட்சிகளும் கூட்டணி அமைத்து கொண்டுதான் இருக்கின்றன என பதில் அளித்தார். 2019-ல் தான் முதலமைச்சராக இருந்தபோதே தேர்தல் அறிவிப்புக்கு பிறகுதான் கூட்டணி அமைக்கப்பட்டது என்றார்.

பிரதமர் வேட்பாளர் இன்றி வெற்றிபெற முடியும்: எடப்பாடி பழனிசாமி
பிரதமர் வேட்பாளரை முன்நிறுத்திதான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை. கூவத்தூர் விவகாரம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்த முன்னாள் நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் நாங்கள் பார்க்கிறோம். தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் கூட்டணி தர்மத்தை பார்க்க வேண்டி உள்ளது. தேசிய அளவில் எடுக்கப்படும் முடிவுகளால் கூட்டணியில் பாதிப்பு ஏற்படுகிறது என்று அவர் கூறினார்.

 

The post தேசிய கட்சிகளுடன் கூட்டணி கிடையாது.. பிரதமர் வேட்பாளர் இன்றி அதிமுக வெற்றிபெறும்: எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்!! appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Madurai ,General ,General Secretary ,Madurai Airport ,Dinakaran ,
× RELATED சொன்னத எப்போ செஞ்சி இருக்காங்க… பாஜ...