×

மதுபோதையில் லாரிக்கு தீ வைத்த சிறுவன் கைது

சென்னை: சென்னை கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் அருகே மதுபோதையில் லாரிக்கு தீ வைத்த சிறுவர்களால் பரபரப்பு ஏற்பட்டது. சாலையோரம் நிறுத்தி இருந்த லாரிக்கு மதுபோதையில் பெட்ரோல் ஊற்றி சிறுவர்கள் தீ வைத்துள்ளனர். பொதுமக்கள் அளித்த தகவலை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவனை கைது செய்துள்ள போலீசார் மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.

The post மதுபோதையில் லாரிக்கு தீ வைத்த சிறுவன் கைது appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Korukuppet Limestone Canal ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...