×

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மேலூர் வட்டத்தில் இன்று தங்கி கலெக்டர் திட்ட பணிகள் ஆய்வு

மதுரை: மதுரை மாவட்டத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் கலெக்டர் சங்கீதா மேலூர் வட்டத்தில் இன்று ஒரு நாள் வருவாய் வட்டம் அளவில் தங்கி அரசு திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்ள உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களை நாடி, மக்கள் குறைகளை கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே வரும் \”உங்களை தேடி உங்கள் ஊரில்\” என்ற புதிய திட்டத்தினை அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட கலெக்டரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்று அடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். இதன்படி மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா இன்று மேலூர் வட்டத்தில் காலை துவங்கி பல்வேறு அரசு திட்டப் பணிகளை நேரில் களஆய்வு மேற்கொள்ள உள்ளார். மேலும் மக்கள் நலன் சார்ந்து செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் உடன் ஆய்வு கூட்டம் நடத்த உள்ளார். தொடர்ந்து மேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார். இத்தகவல் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம் மேலூர் வட்டத்தில் இன்று தங்கி கலெக்டர் திட்ட பணிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Sangeeta ,Chief Minister ,Tamil Nadu ,K. Stalin ,Dinakaran ,
× RELATED மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு...