×

ஐதராபாத்தில் திருமணம் நிச்சயமான நிலையில் ‘ஸ்மைல் டிசைனிங்’பல் சிகிச்சை பெற்ற மாப்பிள்ளை பரிதாப பலி

திருமலை: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் விஞ்சம் லட்சுமிநாராயணா(29). இவருக்கு திருமணம் நிச்சயமான நிலையில், ஜூப்ளி ஹில்ஸ் சாலையில் உள்ள சர்வதேச பல் மருத்துவமனையில் ஸ்மைல் டிசைனிங் எனப்படும் ஒரு செயல்முறை சிகிச்சைக்காக சென்றார். தொடர்ந்து பல் சிகிச்சையும் பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சையில் இருக்கும்போதே திடீரென லட்சுமி நாராயணா நேற்று உயிரிழந்தார். மருத்துவர்கள் அதிக அளவில் அளித்த மயக்க மருந்து காரணமாக சுயநினைவை இழந்தார் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட லட்சுமி நாராயணாவை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்நிலையில், தனது மகன் சாவுக்கு பல் மருத்துவர் தான் காரணம் என பாதிக்கப்பட்ட லட்சுமிநாராயணா தந்தை விஞ்சம் ராமுலு ஜூப்ளி ஹில்ஸ் போலீசில் புகார் அளித்தார். அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தியதால் மகன் உயிரிழந்ததாக அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரிக் கின்றனர்.

 

The post ஐதராபாத்தில் திருமணம் நிச்சயமான நிலையில் ‘ஸ்மைல் டிசைனிங்’பல் சிகிச்சை பெற்ற மாப்பிள்ளை பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Tirumala ,Vinjam Lakshminarayana ,Hyderabad, Telangana ,International Dental Hospital ,Jubilee Hills Road ,Groom ,
× RELATED ஐபிஎல்: இன்றைய போட்டியில் ஹைதராபாத் – டெல்லி இன்று மோதல்