×

15வது ஊதிய குழு உட்பட 6 அம்ச கோரிக்கை தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..!!

சென்னை: 15வது ஊதிய குழு உட்பட 6 அம்ச கோரிக்கை தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 15வது ஊழியர் குழுவை அமைக்க வேண்டும். நிலுவையில் இருக்க கூடிய ஓய்வு பெற்றவர்களுக்கான 96 மாத ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும், அகவிலைப்படியை வழங்கவேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் கடந்த ஜனவரி மாதம் வெளி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ச்சியாக தொழிலாளர் நலத்துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் மற்றும் போக்குவரத்து துறை உடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைப்பெயற்று வருகிறது. குறிப்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்து 4 கட்டங்களாக நடைபெற்றிருந்தது. 4 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படாத நிலையே தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில் பிரதான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என தொழிற்சங்கத்தினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில் 15வது ஊதிய குழு அமைப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளில் தமிழக போக்குவரத்துத்துறை ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக நாளைய தினம் போக்குவரத்து தொழிலாளர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தொழிலாளர் நலத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்படக்கூடிய இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு மதியம் 3 மணி அளவில் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ளுமாறு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் போது மீதம் இருக்கக்கூடிய கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக வலியுறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மதியம் 3 மணி அளவில் தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் இருக்கக்கூடிய தொழிலாளர்கள் நல அலுவலகத்தில் தொழிலாளர்கள் நலத்துறை இணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

The post 15வது ஊதிய குழு உட்பட 6 அம்ச கோரிக்கை தொடர்பாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை பேச்சுவார்த்தைக்கு அழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Transport unions ,CHENNAI ,Staff Committee ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...