×

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம்

சென்னை: புழல் ஏரியில் நீர்இருப்பு 2411 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 159 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 1081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 757 மில்லியன் கனஅடியாக உள்ளது. கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 478 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம், கண்ணன்கோட்டை ஆகிய 5 ஏரிகளில் 79.27% நீர் இருப்பு உள்ளது. செம்பரம்பாக்கம் – 83.92%, புழல் – 73.06%, பூண்டி – 80.93%, சோழவரம் – 70.03%, கண்ணன்கோட்டை – 95.6% நீர் இருப்பு உள்ளது.

The post சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் இருப்பு நிலவரம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Lake Maghal ,Lake Chozhavaram ,Kannankottai ,Targavaikanddikai Lake ,Chennai Drinking Lakes ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!