×

அரசு பள்ளியில் குறும்படம் தயாரிப்பு போட்டி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு படைப்பாற்றலை வெளிப்படுத்த செயல் விளக்கம்

போளூர், பிப். 20: அரசு பள்ளியில் மாவட்ட அளவிலான குறும்பட தயாரிப்பு போட்டி நடந்தது. இதில் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில் மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வட்டார அளவில் அரசு பள்ளிகளில் குறும்படம் தயாரிப்பு போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்த முதன்மை கல்வி அலுவலர் து.கணேசமூர்த்தி உத்தரவிட்டார். அதன்படி வட்டார அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகள் போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

இந்த போட்டியில் ஒருங்கிணைப்பாளர் பள்ளி துணை ஆய்வாளர் பாபு வரவேற்றார். சிறார் திரைப்படம் சார்ந்த குறும்பட தயாரிப்பு போட்டிகளுக்காக ஆசிரியர் பிரிட்டோ, எழுத்தாளர் எறும்பூர் க.செல்வகுமார் ஆகியோர் போட்டி நடுவர்களாக செயல்பட்டனர். குறும்பட போட்டி செயல் விளக்கத்தில் 49 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். முறையாக 39 மாணவர்கள் மட்டுமே வீடியோ பதிவேற்றம் செய்திருந்தனர். 8 பள்ளிகளை சார்ந்த மாணவர்கள் குறும்பட செயல் விளக்கத்தில் முழுமையாக பங்கேற்றனர். போட்டியில் கலந்து கொண்ட அனைத்து பள்ளி மாணவர்களின் வீடியோ பதிவுகளும் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. முன்னதாக தனிநபர் நடிப்பு, வினாடி வினா போட்டிகளும் நடைபெற்றது. வட்டார அளவில் வெற்றி பெற்ற நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று தமது படைப்பாற்றலை வெளிப்படுத்தினர்.

The post அரசு பள்ளியில் குறும்படம் தயாரிப்பு போட்டி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு படைப்பாற்றலை வெளிப்படுத்த செயல் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Bloor ,Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED வேலூரில் போலி சாப்ட்வேர் பயன்படுத்தி...