×

வேலூரில் போலி சாப்ட்வேர் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் இ-டிக்கட் விற்ற டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சீல்

*திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப்படை அதிரடி

வேலூர் : வேலூர், திருவண்ணாமலையில் போலியான சாப்ட்வேரை பயன்படுத்தி, கள்ளச்சந்தையில் இ-டிக்கட் முன்பதிவு செய்து விற்கப்படுவதாக திருச்சி கோட்ட ரயில்வே பாதுகாப்புப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப்படை ஐஆர்பிஎப்எஸ் அதிகாரி அபிஷேக் உத்தரவின்பேரில் திருவண்ணாமலை ரயில்வே பாதுகாப்புப்படையினர் வேலூர் சைதாப்பேட்டை லத்தீப் பாஷா தெருவில் இயங்கி வரும் தனியார் டிராவல்ஸ் நிறுவனத்தில் நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.

சோதனையில் 1 இ-டிக்கட், 13 காலாவதியான இ-டிக்கட்டுகள் மற்றும் கணினி உபகரணங்கள் கைப்பற்றப்பட்டு 45 வயதான டிராவல்ஸ் உரிமையாளரை ரயில்வே பாதுகாப்புப்படையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரது சொந்த ஐடியை பயன்படுத்தி போலியான நெக்ஸஸ் சாப்ட்வேர் மூலம் இ டிக்கட்டுகளை முறைகேடாக முன்பதிவு செய்து விற்று வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவரது டிராவல்ஸ் நிறுவனத்துக்கு ரயில்வே பாதுகாப்புப்படையினர் சீல் வைத்தனர்.அதேபோல் திருவண்ணாமலையிலும் போலியான சாப்ட்வேரை பயன்படுத்தி ரயில்வே இ டிக்கட்டுகளை முன்பதிவு செய்து விற்ற 2 டிராவல்ஸ் நிறுவனங்களுக்கும் ரயில்வே பாதுகாப்புப்படையினர் சீல் வைத்தனர்.

5. குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் பைக் கவிழ்ந்து வாலிபர் பலி

குளத்தூர் : குளத்தூர் அருகே கிழக்கு கடற்கரை சாலை பள்ளத்தில் பைக் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் பலியானார். தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் கணேஷ் நகரை சேர்ந்தவர் வேணுகோபால் மகன் முத்துராஜா(26). இவர், புல்லாவெளியில் உள்ள உப்பளக் கம்பெனியில் ஆப்ரேட்டராக வேலை செய்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு குளத்தூரில் ஆனித்திருவிழா நிகழ்ச்சிகளை பார்ப்பதற்காக முத்துராஜா, அவரது நண்பர் சிவமுருகனுடன் பைக்கில் வந்துள்ளார். நிகழ்ச்சியை முடித்து விட்டு ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் முத்துராஜா மட்டும் பைக்கில் வீடு திரும்பியுள்ளார்.

கிழக்கு கடற்கரை சாலையில், வேப்பலோடை கேட் அருகே உள்ள பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக பைக்குடன் விழுந்ததில் முத்துராஜா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காலையில் அவ்வழியாக சென்றவர்கள் பார்த்து குளத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

The post வேலூரில் போலி சாப்ட்வேர் பயன்படுத்தி கள்ளச்சந்தையில் இ-டிக்கட் விற்ற டிராவல்ஸ் நிறுவனத்துக்கு சீல் appeared first on Dinakaran.

Tags : Travels ,Vellore ,Tiruvannamalai Railway Security Force Action ,Trichy Kota Railway Defence Forces ,Tiruvannamalai ,Vellore, Tiruvannamalai ,Railway Protection Force ,IRPBS ,Abhishek ,Dinakaran ,
× RELATED மாணவிகள் முன் நிர்வாண போஸ் உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்